முதல்முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகம்: எங்கு தெரியுமா?

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (13:08 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் சேவை வரி அதிகரிப்பு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது
 
கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலையும் டீசல் விலையும் அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில் வரலாறு காணாத வகையில் முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை டெல்லியில் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
நாடு முழுவதும் 17 வது நாளாக பெட்ரோல் டீசல் விலை என்ன விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் இடையே ஒரு சில ரூபாய்கள் விலையில் வேறுபாடு இருந்து வந்தது என்பதும், இதுவரை பெட்ரோல் விலை டீசலின் விலையை விட அதிகமாகவே இருந்துள்ளது என்பது தெரிந்ததே 
 
ஆனால் டெல்லியில் முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை 79 ரூபாய் 88 காசுகளாகவும் பெட்ரோல் விலை 79 ரூபாய் 76 காசுகளாகவும் உள்ளது இதனால் பெட்ரோல் விலையை விட டீசல் விலை 12 காசுகள் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெட்ரோல் விலையில் 64%ம், டீசல் விலையில் 63%ம், மத்திய மாநில அரசுகள் வரிகள் விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்