நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கார் வழிமறிப்பு: தெலுங்கானாவில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (18:31 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார் காங்கிரஸ் தொண்டர்களால் மறிக்கப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தெலுங்கானாவில் மத்திய நிதியமைச்சர் வருகை தந்த போது அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் நிர்மலா சீதாராமன் காரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் 
 
இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. இதனை அடுத்து பாஜகவினர் நிர்மலா சீதாராமன் காருக்கு முன்பாக நின்று அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி அவருடைய காரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்
 
இந்த நிலையில் காவல்துறையினர் மத்திய நிதியமைச்சரின் காரை மறியல் செய்து போராட்டம் செய்த காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்