இந்நிலையில் தன் பெற்றோர் தன்னை ஏற்றுக்கொள்வார் என்று மீனாட்சி திரும்ப தன் பெற்றோ வீட்டுக்கு முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து தகவக் அறிந்த ராஜ்குமார்,தன் மகள் வீட்டுக்கு வந்தால் அவமானம் ஏற்பட்டு விடும் என்று கருதி, தன் மகளை மற்றோரு இடத்திற்கு அழைத்துள்ளார்.
அங்கு வந்த மகள் மீனாட்சியை கர்ப்பிணி என்று கூட பார்க்காமல், கத்தியால் குத்தி கொடூரமாகக் கொன்றார் ராஜ்குமார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மீனாட்சியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகு ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ராகுமாரை கைது செய்து போலீஸார் விசாரித்தனர். அதில் தான் மகளைக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.