மகாராஷ்டிராவிற்கு பதிலாக மத்தியபிரதேசம் சென்ற ரயில்: பயணிகள் அதிர்ச்சி

வியாழன், 23 நவம்பர் 2017 (05:55 IST)
சாலை வழியாக பயணம் செய்யும் பேருந்துகள், கார்கள் சிலசமயம் டிரைவர் புதியவர் என்றால் வழிமாறி செல்வது வழக்கம். அதுவும் ஒருசில கிமீ தூரம் தவறாக சென்றவுடன் திருத்தி கொண்டு சரியான வழியை கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் மகாராஷ்டிரம்செல்ல வேண்டிய ரயில் ஒன்று மத்தியபிரதேசம் சென்ற கூத்து ஒன்று சமீபத்தில் அரங்கேறியுள்ளது.





டெல்லியில் போராட்டம் செய்த சுமார் 1500 விவசாயிகள் தங்கள் போராட்டம் முடிந்தவுடன் சுவாபிமானி விரைவு ரயிலில் மகாராஷ்டிரா செல்ல புறப்பட்டனர். திங்கள் இரவு கிளம்பிய இந்த ரயில் மேற்கு நோக்கி செல்வதற்கு பதிலாக மத்திய பகுதியை நோக்கி சென்றுவிட்டது. அதாவது மகாராஷ்டிரா செல்லும் பாதைக்கு பதிலாக மத்தியபிரதேசம் செல்லும் பாதைக்கு சென்றுவிட்டது

இரவு நேரம் என்பதால் பயணிகள் அயர்ந்து தூங்கிவிட்டதால் ரயில் தவறான பாதையில் சென்றுவிட்டதை அவர்கள் அறியவில்லை. நீண்ட நேரம் கழித்து சுதாரித்த சில பயணிகள் ரயிலை செயினை இழுத்து நிறுத்தி எஞ்சின் டிரைவரிடம் நடந்த  தவறை கூறினர். இதனையடுத்து இந்த தகவல் ரயில்வே உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு பின்னர் சரியான வழித்தடத்திற்கு திருப்பப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் இடையே சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்