இந்த நிலையில் இன்று ஆர்ஜே பாலாஜி ஆங்கில ஊடகம் ஒன்றில் விவசாயிகளின் டெல்லி போராட்டம் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டார். அப்போது அந்த ஊடகத்தின் நிருபர் 'தமிழக விவசாயிகள்' என்று ஆரம்பித்தபோது குறுக்கிட்ட ஆர்ஜே பாலாஜி, ‘‘சார் மன்னிக்கவும், அவர்கள் தமிழகத்தை சார்ந்தவர்கள் தான். ஆனால் இந்திய விவசாயிகள் என்று இடைமறித்தார்.
மேலும் 'கிரிக்கெட்டில் அஷ்வின் சாதனை படைக்கும் போது மட்டும் ஏன் இந்திய கிரிக்கெட் வீரர் என்று சொல்கிறீர்கள். அப்போது அவர் தமிழனாக தெரியவில்லையா, இவர்களை இந்திய விவசாயிகளாக பாருங்கள், அவர்கள் சொல்வதை கொஞ்சமாவது காது கொடுத்து கேளுங்கள்’’ என நிருபரை கடிந்து கொண்டார். இதனால் நிருபர் வாயடைத்து போனார் என்பதை சொல்லவும் வேண்டுமா?