பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி செல்லும் பேரணி நடத்தும் போராட்டத்தை ஒத்திவைப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராடி வரும் நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது
இந்த போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்ததாகவும் அவர்கள்தான் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை நடத்த இருப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்திருந்தன
இந்த நிலையில் இந்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக தற்போது விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது போராட்டத்தில் புகுந்து வன்முறையை உருவாக்குவதால் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை ஒத்திவைப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது