பிரபல செய்தியாளர் புகாரி பயங்கரவாதிகளால் சுட்டுப் படுகொலை

வெள்ளி, 15 ஜூன் 2018 (12:07 IST)
ஜம்மு காஷ்மீரில் வெளியாகும் ரைசிங் காஷ்மீர் பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் ஷுஜாத் புகாரியை  பயங்கரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ரைசிங் காஷ்மீர் என்ற நாளிதழின் ஆசிரியரான ஷுஜாத் புகாரி, நாட்டின் அமைதி குறித்தும் பயங்கரவாதிகளின் அட்டுழியங்கள் குறித்து விமர்சனம் செய்து வந்தார். புகாரி பல ஆண்டுகளாக தி இந்து பத்திரிக்கைக்கு சிறப்பு செய்தியாளராக பணியாற்றி உள்ளார்.
 
இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரை  வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். 
இதில் படுகாயமடைந்த அவரும் அவரது பாதுகாவலர்களும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் புகாரி பரிதாபமாக் உயிரிழந்தார். மேலும் அவர்து பாதுகாவலர் ஒருவரும் உயிரிழந்தார். ஒரு பத்திரிக்கையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிளில் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியிட்ப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க பொதுமக்கள் உதவுமாறு போலீஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். புகாரியின் இறுதி ஊர்வலம் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்