காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனிடையே உடல் முழுக்க தீயுடன் ஒருவரும், அவரை சுற்றி சில காவலர்கள் நிற்கும் காட்சிகளுடைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்த வீடியோவில், இந்திய படைகள் காஷ்மீர் போராட்டகாரரை தீவைத்து எரிக்கும் காட்சி என குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது அந்த வீடியோவின் உண்மை பின்னணி தெரியவந்துள்ளது. அதாவது அந்த வீடியோ கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில் தீ குளிப்பவரின் பெயர் பாபுராவ் சைனி. இவர் வனப்பகுதிக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டியிருந்ததால், அதனை இடிக்க வனத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். அதனைத் தடுப்பதற்கு இவ்வாறு தீ குளித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட சைனி ஜூலை 11 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.