200 டன் எடைகொண்ட படகை ’ஒருவிரலால்’ இழுத்த நபர்...ஆச்சர்யப்பட்ட மக்கள் - வைரல் வீடியோ

திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (20:19 IST)
ஜார்ஜியாவை சேர்ந்த ஒருவர், 200 கிலோ எடை கொண்ட கடலில் செல்லும் படகை தனது ஒற்றை விரலால் இழுத்து சாதனைப் படைத்துள்ளார்.
ஜார்ஜியாவில் உள்ள பட்டுமி நகரில் கரைக்கு 5 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட டமாரா 2 என்ற பெயரிடப்பட்ட சுமார் 20 கிலோ கொண்ட படகை, ஜியோர்கி என்பவர் தனது நடுவிரலில் இழுத்து அங்கு குழுமியிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
 
ஜியோர்கி, தரையில் ஒரு இரும்பு ஏணியை வைத்து, அதன் உதவியுடன் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் கூறியதாவது : இந்த சாதனையை செய்யும் போது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இந்தச் சாதனையை செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியில் செய்து முடித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
 
இந்நிலையில்  ஒருவிரலில் ஒரு படகை இழுத்துள்ள ,ஜார்ஜியோவின் சாதனையை அங்கீகரித்துள்ள ஜார்ஜியா சாதனைகள் சங்கம், இவரது சாதனையை கின்னஸ் சாதனைக்கு தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்