ரயில்களில் ஜன்னலோர இருக்கை கேட்பவர்களுக்கு ஆப்பு வைத்த நிர்வாகம்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (04:02 IST)
பஸ், ரயில், விமானம் என எதில் பயணம் செய்தாலும் சரி ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து பயணம் செய்வதையே பெரும்பாலான பயணிகள் விரும்புவார்கள். குறிப்பாக ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ஜன்னலோர சீட்டுக்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்

இந்த நிலையில் ஜன்னலோர இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முன்பதிவு செய்பவர்கள் பெரும்பாலும் ஜன்னலோர இருக்கை கேட்பதால் இந்த முடிவை ரயில்வே நிர்வாகம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் சைடு பெர்த்' என்று கூறப்படும் பக்கவாட்டு படுக்கைக்கான கட்டணத்தை குறைக்கவும், ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு கூட்டம் அதிகமாக இருக்கும் காலங்களில் கூட்டத்திற்கேற்ப கட்டணம் உயர்த்தும் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜன்னலோர இருக்கைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அறிமுகம் செய்துள்ளதற்கு பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்