பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

Prasanth Karthick

வியாழன், 15 மே 2025 (12:34 IST)

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தப்பட்டிருந்தாலும் பாகிஸ்தான் தொடர்பான பொருட்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. அதை தொடர்ந்து இந்தியாவை தாக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளும் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டன. இந்த போர் விவகாரத்தில் துருக்கி, சீனா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தான் பின்னணியில் இருந்து உதவினாலும், எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்திய ராணுவம் பாகிஸ்தானை நேரடியாக எதிர்கொண்டது.

 

தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும் பாகிஸ்தான் சார்ந்த பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்வதில் மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முக்கியமாக பாகிஸ்தான் நாட்டுக் கொடி மற்றும் கொடி பதித்த பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. இதுகுறித்து அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஆனால் இந்த நோட்டீஸுக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் எந்த வித பதிலும் அளிக்கவில்லை என்றும், அதுகுறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டப்பின் அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்