இந்த நிலையில், இன்று முதல் சிறப்பு எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பரிவர்த்தனைகளில் சில நெறிமுறைகளை ஏற்படுத்த இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பணப் பரிவர்த்தனையின் போது யுபிஐ ஐடியில் சிறப்பு எழுத்துக்கள் இருந்தால் அந்த பரிவர்த்தனை நிராகரிக்கப்படும் என்றும், உதாரணமாக @,#,%,&
எனவே, யுபிஐ ஐடிகள் ஆங்கில எழுத்துக்களில் A முதல் Z வரை மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அதேபோல் எண்களில் 0 முதல் 9 வரை மட்டுமே இருக்க வேண்டியது அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தாலும், சிறப்பு எழுத்துக்கள் இருந்தால் பிப்ரவரி 1 முதல் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, யுபிஐ ஐடியில் சிறப்பு எழுத்துக்கள் வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்கள் ஐடிகளை மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.