தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்: அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்குப்பதிவு

புதன், 13 டிசம்பர் 2017 (09:09 IST)
சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்து வருவதாகவும், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு முக்கிய அரசியல் கட்சிகள் பணம் பட்டுவாடா செய்வதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் அமைச்சர் செல்லூர் ராஜூவும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.

அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் அமைச்சர் செல்லூர் ராஜூ தேர்தல் நடத்தை விதியை மீறி மாலை 5 மணிக்கு பின்னரும் பிரச்சாரம் செய்ததாக தேர்தல் பார்வையாளர்கள் வீடியோ ஆதாரத்துடன் ஆர்கே நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை அடுத்து ஆர்கே நகர் காவல்துறையினர் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அவரது ஆதரவாளர்கள் 15 பேர் மீது தேர்தல் நடத்தை விதி மீறியதாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் விதிமுறையை ஒரு அமைச்சரே மீறியிருப்பதும் காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்