நாளை டெல்லி செல்கிறார் எடப்பாடி:பிரதமரை சந்திக்கவிருப்பதாக தகவல்

வியாழன், 13 ஜூன் 2019 (14:17 IST)
தமிழக முதல்வர் பழனிசாமி, வருகிற 15 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று தமிழக முதல்வர் பழனிசாமி, 7 பேர் விடுதலை குறித்து ராஜ்பவனில் ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை சந்தித்தார்.

இந்நிலையில் வருகிற 15 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கிற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமியுடன், தலைமைச் செயலகர் கிரிஜா வைத்தியநாதனும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்