டாப் சீக்ரெட்!! பாஜக தலைவர் யார்? அமித்ஷாவின் வியூகம் கைக்கொடுக்குமா?

வியாழன், 13 ஜூன் 2019 (10:01 IST)
பாஜக தலைவராக அமித் ஷா தொடருவார் என டெல்லியில் இருந்து அரசல் புரசலாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த கடந்த 2014 ஆம் ஆண்டு ராஜ்நாத் உள்துறை அமைச்சராக பதவியேற்றதால் அமித் ஷா பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றார். ஆனால் இப்போது அமித்ஷா உள்துறை அமைச்சராகி உள்ளதால் அவருக்கு பதிலாக புதிய தலைவரை பாஜக தேர்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. 
 
அப்படி இருக்க உள்துறை அமைச்சராக இருக்கும் பொழுதிலும் பாஜக தேசிய தலைவராக அமித்ஷா அடுத்த 6 மாதங்களுக்கு தொடருவார் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இன்று பாஜக தலைமையகத்தில் கூடும் கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 
பாஜகவின் விதிகளின் படி அமைச்சர் உள்பட அரசின் பொறுப்பில் இருக்கும் நபர் கட்சி தலைவர் பொறுப்பில் இருக்க கூடாது. ஆனால், அமித் ஷாவுக்காக இந்த விதிகளை மோடி மற்றும் பாஜகவினர் தளர்த்துவார்களா என தெரியவில்லை. 
 
பாஜக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற அமித் ஷா ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படும் நிலையில் இதை காரணமாக கொண்டு அவரே தலைவர் பதவியில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்