எதுக்கு இந்த விளம்பரம்? டிவிட்டர்வாசிகளிடம் மொக்க வாங்கிய தமிழிசை!

வியாழன், 13 ஜூன் 2019 (10:48 IST)
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மோடி ஆதரவாக பேசி டிவிட்டர்வாசிகளிடம் மொக்கை வாங்கியுள்ளார். 
 
பிரதமர் மோடியை வெளிநாடு பிரதமர் என கேலி செய்த திமுகவே இந்த செய்தியை பாருங்கள் என தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். 
 
அதாவது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெயசங்கர், ஓமன் நாட்டில் 17 இந்தியர்கள் அந்நாட்டு இளவரசரால் தண்டனை விதிக்கப்பட்டனர். அவர்கள் 17 பேரையும் ரமலான் திருநாளை முன்னிட்டு விடுதலை செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது என செய்தி வெளியிட்டிருந்தார். 
 
இதை குறிப்பிட்டு, தொலைநோக்கு பார்வையில் ராஜீய ரீதியிலான உறவுக்கு கிடைத்த வெற்றிதான் இந்த 17 பேர் விடுதலை என்பதாகும். பிரதமரின் வெளிநாட்டு கொள்கை மூலம் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை திமுகவின் பார்வைக்கு முன்வைக்கிறேன் என பதிவிட்டார். 
இதை கண்ட டிவிட்டர் வாசிகள் தமிழிசையை கலாத்து கமெண்டுக்களை பதிவிட்டுள்ளனர், அவற்றில் சில உங்கள் பார்வைக்கு... 
 
அக்கா இது நம்முடைய நாட்டில் சுதந்திர தினத்திற்கும் எம்ஜிஆர் அண்ணாதுரை போன்றவர்களின் பிறந்த தினத்தில் நன்னடத்தைகளுக்கு விடுதலை செய்யும் செயலுக்கு நிகரானது இதில் அரசியல் செய்யாதீர்கள்! 
 
பல காலமாக ரமலான் காலத்தில் சிறைவாசிகளை விடுதலை செய்வது உள்ளது, தானே நடப்பதை தன்னால் நடப்பதாக விளம்பரம் செய்வதில் உங்க கட்சிகாரங்களை யாரும் அடிச்சிக்க முடியாது. நீ வாங்குற ஐந்து பத்து பிச்சைக்கு ஏன் இந்த விளம்பரம் என்ற கவுண்டமணி டயலாக்தான் நினைவில் வருகிறது.
 
சரி மோடிக்கு அந்த பெருமை போகட்டும். ஈகை திருநாள் தியாக திருநாளில் ஓமன் அரசு பெருந்தன்மையோடு நடந்துகொள்கிறது. இஸ்லாம் மதம் அன்பை விதைக்கிறது என்றும் நீங்கள்  பொருள் கொள்ளளாமே!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்