அமலாகத்துறையின் அடுத்த டார்கெட் பிரியங்கா காந்தி? கணவரும் சிக்குகிறாரா?

வெள்ளி, 29 டிசம்பர் 2023 (07:48 IST)
மத்திய அரசு எதிர்க்கட்சி தலைவர்களை அமலாக்க துறையை வைத்து மிரட்டுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் மீதும் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறையை வைத்து திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா கடந்த 2005, 2006ஆம் ஆண்டுகளில் 40.8  ஏக்கர் நிலத்தை வாங்கியதாகவும்  ஆனால் அந்த நிலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு கழித்து விற்றவருக்கே திரும்ப அவர் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.  

இது குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் ராபர்ட் மற்றும்  பிரியங்கா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று குறிப்பிடவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரியங்கா காந்தியின் இமேஜை வீழ்த்துவதற்காக அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு முயற்சி செய்கிறதா? அல்லது உண்மையிலேயே பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் குற்றம் செய்திருக்கிறார்களா என்பது விசாரணை முடிவில் தான் தெரியவரும்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்