உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்

சனி, 4 பிப்ரவரி 2023 (16:54 IST)
பிரதமர் நரேந்திரமோடி  உலகிலேயே அதிகம் விரும்பப்பட்ட தலைவர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் பிரபல நிறுவனமான மார்னிங் கன்சல்ட்   ஒவ்வொரு ஆண்டும்  உலகில் பிரபலமான தலைவர்கள் பற்றிய ஆய்வு  நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம்தேதி  முதல் 31 ஆம் தேதி வரை உலகில் பிரபல 22 நாடுகளின் தலைவர்கள் பற்றி அந்த நாட்டு மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி, அதன் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில், பிரதமர் மோடி 78% ஒப்புதல் மதிப்பீட்டுடன் முதலிடம் பிடித்துள்ளார். 

மெக்சிகோ அதிபர் லாபெஸ் ஒபராடோர் 68% பேர் இரண்டாவது இடத்திலும், சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்சைட் 62%  சதவீததிதுடன் 3 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இப்பட்டியலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40%  -; 7 வது இடமும், ஜஸ்டின் ட்ரூடோ 9 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு எதிராக 18 சதவீதம் பேர் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்