இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான போட்டியைக் காணும் பிரதமர் மோடி

வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (19:12 IST)
ஆஸ்திரெலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசிப் போட்டியை  பிரதமர் மோடி  நேரில் காண வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது.  டெல்லியில்,.2 வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 21 வரை நடக்கவுள்ளது. அகமதாபாத்தில் 3 வது டெஸ்ட் போட்டி மார்ச் 1 முதல்  5 ஆம் தேதி வ்ரை நடக்கவுள்ளது.

இதேபோல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மார்ச் 17, 19, 22 ஆம் தேதி வரையில் மும்பை, விசாக பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்க  உள்ளது.

 ALSO READ: பிரதமர் மோடியின் வெளி நாட்டு பயண செலவு எவ்வளவு? அமைச்சர் தகவல்

இந்த நிலையில்,  கடைசி டெஸ்ட்  போட்டியை இந்திய பிரதமர் மோடியும், ஆஸ்திரெலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இத்தொடரில் வெற்றி பெற்றால், இந்திய அணி முதலிடத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்