வட மாநிலங்களை தற்போது புழுதி புயல் புரட்டி போட்டி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட புழுதி புயலில் சிக்கி 140 பேர் பலியாகினர்.
இந்நிலையில், நேற்று மழை மற்றும் மின்னலுடன் புழுதிப் புயல் தாக்கியது. புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையல் எச்சரிக்கை விடுத்திருந்தது போலவே புயல் தாக்கி பலர் பலியாகியுள்ளனர்.
உ.பி.யில் ஏற்பட்ட புழுதி புயலுக்கு 18 பேரும், மேற்கு வங்கத்தில் 4 குழந்தைகள் உள்பட 12 பேரும், ஆந்திராவில் மின்னல் தாக்கி 9 பேரும், டெல்லியில் 2 பேரும் என மொத்தம் 41 பேர் பலியாகியுள்ளனர், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
மின்னல் தாக்கியதில் வீடுகள் எரிந்து நாசமாயின. புழுதிப் புயலால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 70 விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
புழுதிப் புயல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள்னர்.
இவ்வாரு இருக்கையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மற்றும் மழையுடன் புழுதி புயல் தாக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் எச்சரித்துள்ளது.