வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. கனமழைக்கு வாய்ப்பு..!

சனி, 21 அக்டோபர் 2023 (10:43 IST)
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நிலை கொண்டுள்ளதாகவும், இது அக்டோபர் 22ம் தேதில் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், கேரளாவுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.
 
அதேபோல் அரபிக்கடலில் உருவான புயலுக்கு தேஜ்" என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் வரும் 22 அக்டோபர் மாலைக்குள் புயலாக உருவெடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் உருவான பிறகு, அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
புயல் காரணமாக, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையில் 22 மற்றும் 23 அக்டோபர் ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
தேஜ் புயல் குறித்து மேலும் தகவல்களை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் என்றும், புயல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்