அரபிக்கடலில் உருவான புயலுக்கு பெயர் வைப்பு.. வானிலை ஆய்வு மையம்

வெள்ளி, 20 அக்டோபர் 2023 (12:52 IST)
அரபிக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
  அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக 24 மணி நேரத்தில் மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதேபோல் தற்போது அரபிக் கடலில் புயல் உருவாகி இருப்பதாகவும் இந்த புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அரபிக் கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக  கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் கன மழை உருவாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  அக்டோபர் 21 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்பு    உள்ள நிலையில் மும்பையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்