அலைக்கழித்த கல்வி நிர்வாகம்; கல்லூரியை தீயிட்டு கொளுத்திய மாணவன்

Webdunia
சனி, 3 பிப்ரவரி 2018 (15:54 IST)
குஜராத் பல்கலைக்கழக நிர்வாகம் முன்னாள் மாணவனுக்கு, சான்றிதழ் தராமல் அலைக்கழித்ததால் கடுப்பான மாணவன் கல்லூரி அலுவலகத்திற்கு தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திர மோகன். இவர் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் படித்துள்ளார். மாணவனுக்கு அரியர்ஸ் ஏதும் இல்லாத போதிலும், பல்கலைக் கழக நிர்வாகம் மாணவனுக்கு சான்றிதழ் வழங்கவில்லை. இதுதொடர்பாக பல்கலைக்கழகத்திற்கு பலமுறை கடிதம் எழுதியும் அவருக்கு பதிலில்லை. அதிருப்தி அடைந்த சந்திரமோகன் பல்கலைக்கழகத்திற்கு சென்று துணைவேந்தரை சந்திக்க முயற்சித்துள்ளார்,

ஆனால் முடியவில்லை. இதுதொடர்பாக துணைவேந்தரின் உதவியாளருக்கும் சந்திர மோகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதனால் ஆத்திரமடைந்த சந்திர மோகன், தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை அலுவலக சோபாவில் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் துணை வேந்தரின் அலுவலகம் உள்ளிட்ட 2 அறைகளில் தீ பரவியது. அங்கிருந்த சில ஆவணங்களும் கருகின. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சந்திரமோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்