’உயிருக்கே ஆபத்தானது’ – தயவு செய்து இதை யாரும் செய்யாதீர்கள்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (14:35 IST)
கொழும்புவிலிருந்து ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சாந்தினி (27) என்ற பெண் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

\
 


அவரை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை நடத்தியதில், அப்பெண் ரூ. 2.5 கோடி மதிப்புள்ள 1 கிலோ ஹெராயின் பொருட்களை தன் வயிற்றில் கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் பிறகு, அந்தப் பெண்ணை காவல்துறையினரால் கைது செய்து செய்யப்பட்டார்.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், அப்பெண்ணின் வயிற்றில் இருக்கக்கூடிய ஹெராயின் பொருட்களை எடுப்பதற்காக, அருவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்