இந்த நிலையில் புதிய தளர்வாக மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து விமான போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது முதல் கட்டமாக உள்நாட்டு விமான சேவையை தொடங்க இருப்பதாகவும் அதன் பின்னர் படிப்படியாக வெளிநாட்டு விமான சேவையை விரிவுபடுத்த வைப்பதாகவும் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்திப்சிங் புரி அவர்கள் தெரிவித்துள்ளார்