மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா? மருத்துவ நிபுணர்கள் கருத்து!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (15:55 IST)
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருக்கும் நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்தநிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் கொரோனா நோய் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த நிலையில் சீனா ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் நபர்களுக்கு கட்டாய கொரோனா  பரிசோதனை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்