நீட் முதுகலை தேர்வை ஒத்திவைத்திட வேண்டும்: மருத்துவர் சங்கம் கோரிக்கை

வியாழன், 12 மே 2022 (09:10 IST)
மே 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நீட் முதுகலை தேர்வு ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது 
 
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு இந்திய மருத்துவ சங்கம் எழுதிய கடிதத்தில் மே 21-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் முதுகலை தேர்வை ஒத்திவைத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது
 
முன்னதாக நீட் முதுகலை தேர்வு திடீரென ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது என்பதும் ஆனால் அந்த தகவல் போலியானது என்றும் திட்டமிட்டபடி மே 21-ஆம் தேதி நீட் முதுகலை தேர்வு நடைபெறும் என்றும் தேசிய தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்