அரசு நடத்துகிறீர்களா? சர்க்கஸ் நடத்துகிறீர்களா? நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கேள்வி

வியாழன், 1 ஏப்ரல் 2021 (19:05 IST)
அரசு நடத்துகிறீர்களா? அல்லது சர்க்கஸ் நடத்துகிறீர்களா? என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று சிறு சேமிப்பு வட்டி விகிதம் திடீரென குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து அறிவிப்பு வெளிவந்தது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் 
 
அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து இன்று காலை வட்டி குறைப்பு வாபஸ் பெறப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்தார். மேலும் இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்கையில், ‘தன்னுடைய கவனத்திற்கு வராமலேயே நிதியமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு விடுவதாகவும் இதனை அடுத்து மீண்டும் வட்டி குறைப்பு அறிவிப்பை தான் வெளியிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார் 
 
இந்த நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் அறிவிப்பு ஒரு மத்திய அமைச்சரின் கவனத்திற்கு வராமல் வெளிவந்து விட்டது என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் நீங்கள் நடத்துவது அரசா அல்லது சர்க்கஸா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதுபோன்ற குளறுபடிகளை செய்த நிதியமைச்சர் இனியும் அந்த பதவியில் நீடிப்பதற்கு உரிமை இல்லை என்று ரந்தீப் கூறியுள்ளார் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்