மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி கொடுப்பதில்லை என அமெரிக்காவின் மாடர்னா மற்றும் பைஸர் ஆகிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் தெரிவித்தன. இந்நிலையில் இப்போது மத்திய அரசு பைஸர் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் 5 கோடி தடுப்பூசிகளை ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் தர முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தடுப்பூசியை ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம் என சொல்லப்படுகிறது.