சிறுமிக்கு 9 வருடங்கள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 97 ஆண்டு சிறை..!
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (12:52 IST)
ஒன்பது ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர நபருக்கு 97 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவில் உறவுக்கார சிறுமியை 9 ஆண்டுகளாக ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் குற்றவாளிக்கு தொகுத்து 97 வருட சிறை தண்டனையும் 8 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 8.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காசர்கோடு மாவட்ட நீதிமன்றம் அளித்த இந்த அதிரடி தீர்ப்பு கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.