இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஏர் மார்ஷல் ஏகே பாரதி அவர்களிடம் பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுத மையமான கிரானா ஹில்ஸ் தாக்கப்பட்டதா? என்று கேட்டபோது, கிரானா ஹில்ஸ் என்பது அணு ஆயுத மையம் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டதை நான் வரவேற்கிறேன் என்று புன்சிரிப்புடன் கூறிய அவர், கிரானா ஹில்ஸ் அணு ஆயுத மையம் தாக்கப்பட்டதா என்று எங்களுக்கு தெரியாது என்று கூறி சிரித்தார். அந்த சிரிப்பில் பல ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.