மோடி அரசு விளம்பரத்திற்கு செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா?

சனி, 4 பிப்ரவரி 2017 (12:17 IST)
டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் பணமில்லா வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களுக்காக ரூ.94 கோடி செலவு செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.


 

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு மக்கள் மத்தியில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மற்றும் பணமில்லா வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்காக இதுவரை சுமார் 94 கோடி ரூபாய் செலவிப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர், "இதுவரை டிஜிட்டல் பணபரிவர்த்தனை மற்றும் பணமில்லா வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களுக்காக மொத்தம் 93 கோடியே 93 லட்சத்தி 28 ஆயிரத்து 566 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இதில் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் கொடுத்ததற்காக மட்டும் ரூ.14.95 கோடி வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பத்திரிகைகளுக்கு சேர வேண்டிய தொகையை இ-பேமண்ட் மூலமாக மத்திய அரசு வழங்கியது" என்று குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்