இளம்பெண்ணை தரதரவென இழுத்து சென்ற கார்! நிர்வாணமாக கிடந்த உடல்! – டெல்லியில் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (10:44 IST)
டெல்லியில் விபத்தில் காரில் சிக்கிய இளம்பெண்ணை 4 கி.மீ தூரம் கார் தரதரவென இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டியிருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் சுல்தான்புரி பகுதியில் தனது ஸ்கூட்டியில் சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த காரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த விபத்தில் பெண்ணின் ஆடை காரில் சிக்கியதாக தெரிகிறது. ஆனால் அதை கண்டுகொள்ளாத காரை ஓட்டியவர்கள் காரை 4 கி.மீ தூரத்திற்கு ஓட்டி சென்ற நிலையில் இளம்பெண் சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டுள்ளார். இதை கண்ட சிலர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அந்த காரை பிடிக்க போலீஸார் முயன்றுள்ளனர்.

ரோட்டில் தரதரவென இழுத்து செல்லப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்த அந்த பெண் ஆடைகள் கிழிந்து சடலமாக கஞ்சவாலா பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் காரில் சென்ற 4 இளைஞர்களை கைது செய்துள்ளனர். புத்தாண்டு இரவில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்