கொரோனா பாதிப்பு – தமிழகத்தை முந்தி இரண்டாவது இடத்துக்கு சென்ற மாநிலம்!

புதன், 24 ஜூன் 2020 (14:30 IST)
இந்தியாவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவும் வேகம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,56,183 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் ஆறுதல் அளிக்கும் விதமாக 56.70 சதவிகிதம் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் தமிழகத்தை முந்தி டெல்லி இரண்டாம் இடத்துக்கு சென்றுள்ளது. டெல்லியில் 66,602 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் எண்ணிக்கை 64,603 பேராக உள்ளது. முதல் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,39,010 ஆக உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்