இணையதளத்தில் பயங்கரவாதிகளை கண்காணிக்க நவீன கருவி

சனி, 5 நவம்பர் 2016 (18:00 IST)
இணையதளத்தில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை டெல்லி காவல்துறையினர் கண்காணிக்க நவீன கருவிகளை வாங்க உள்ளனர்.


 

 
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் வகுப்பது இணையதளம் மூலம்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் பயங்கரவாதிகள் இணையதளத்தில் செயல்படுவதை மத்திய உளவுத்துறை அமைச்சகம் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
சில நேரங்களில் பயங்கரவாதிகள் மத்திய உளவுத்துறையினரையும் ஏமாற்றி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவும் இணையதளத்தில் தீவிராவாதிகளை கண்காணிக்கும் பணியில் இறங்கியுள்ளது.
 
இதற்காக டெல்லி, லோதி காலனி பகுதியில் காவல்துறை சிறப்பு பிரிவுக்கு தனி அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. இங்கு அமைக்கப்படும் தொலைதொடர்பு தொழில்நுட்பக் கருவிகள் மூலம், பயங்கரவாதிகள் பயன்படுத்தும் அனைத்து வகையான சமூக இணையதளங்களும் கண்காணிக்கப்பட உள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்