மோசடி நிறுவன ஓனர் அனில் அம்பானி: எஸ்.பி.ஐ குத்திய முத்திரை!!

வியாழன், 7 ஜனவரி 2021 (09:17 IST)
அனில் அம்பானியின் மூன்று நிறுவனங்கள் மோசடியானவை என ஸ்டேட் வங்கி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

 
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் டெலிகாம், ரிலையன்ஸ் இன்ஃபராடெல் ஆகிய மூன்று நிறுவனங்களும் மூன்று வங்கி கணக்குகள் மூலம் பெறப்பட்ட ரூ.49,000 கோடி கடனை திருப்பி செலுத்தாப்படாமல் உள்ளது. 
 
இதனை சமாளிக்க முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலத்திற்கு வந்த அனில் அம்பானியின் சொத்துக்களை வாங்கவும் முயற்சிகளை எடுத்தது. இருப்பினும் வாராக்கடன் காரணமாக மோசடி நிறுவனங்களாக இதனை அறிவித்த பின்னர் இந்த வங்கிக் கணக்குகளை முடக்கவும் சிபிஐ விசாரணை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி அனில் அம்பானியின் மூன்று நிறுவனங்கள் மோசடியானவை என ஸ்டேட் வங்கி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே மறுவிசாரணை வரை தற்போதைய  இந்த நிலையே தொடரும் என உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்