இந்தியாவில் போதை பொருட்கள் நீடித்து வரும் நிலையில் சுங்க துறை அதிகாரிகள் அதை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதுதவிர போதைப்பொருள் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளூர் சந்தைகளில் போதை பொருள் விற்பனை, பதுக்கல் போன்றவையும் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீப காலத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு சோதனைகளில் சிக்கிய வெவ்வேறு போதை பொருட்கள் சுங்கத்துறை கட்டுப்பாட்டில் இருந்தன. அவற்றை புதுடெல்லியில் மொத்தமாக அழித்துள்ளனர். சுமார் 200 கிலோவுக்கும் அதிகமாக இருந்த அந்த போதை பொருட்களின் மதிப்பு 1000 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. நாட்டின் தலைநகரில் மட்டும் இவ்வளவு போதை பொருட்கள் பல்வேறு காலக்கட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.