கடைசி ஆசையால் தள்ளிப்போகிறதா தூக்கு.. குற்றவாளிகளின் ப்ளான் என்ன??

வெள்ளி, 24 ஜனவரி 2020 (13:11 IST)
நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நெருங்கி வரும் வேளையில் கடைசி ஆசையை கூறாமல் கால தாழ்த்த நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மருத்துவக் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நான்கு பேர்களுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த நாள்வரும், வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என நீதிமன்றம் அறிவித்தது. 
 
இன்னும் ஒரு வாரத்தில் தூக்குத் தண்டனை நாள் உள்ளதால் அதற்கான வேலைகளில் திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது. நாள்வரின் குடும்பத்துக்கு தண்டனை குறித்து கடிதம் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் குற்றவாளிகளிடம் அவர்களின் கடைசி ஆசை என்ன எனக் கேட்டுள்ளது. ஆனால் அவர்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை எனத் தெரிகிறது. மரண தண்டனை குற்றவாளிகள் தங்களது குடும்ப உறுப்பினரை கடைசி நேரத்தில் சந்திக்க சட்டம் அனுமதிக்கிறது. அதேபோல குற்றவாளிகள் தங்களது சொத்துக்களை யாருக்கு கொடுக்க விரும்புகிறார்கள் எனவும் தெரிவிக்கலாம். 
 
ஆனால், இந்த நாள்வரும் கடைசி ஆசையை தெரிவிக்காமல் இருக்கிறனர். தண்டனை நாளுக்கு இன்னும் சிறுது நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கடைசி ஆசையை கூறாமல் இருந்தால், கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்