இந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதையடுத்து கிறிஸ்மஸ் தினத்திற்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது
இந்த நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் அதாவது டிசம்பர் 26 ஆம் தேதி அரசு விடுமுறை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் என்பதும் அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் ஞாயிற்றுக்கிழமை வருவதை அடுத்து அன்று இரவே கிளம்பினால் தான் மறுநாள் பணிபுரியும் இடத்திற்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டிசம்பர் 26 ஆம் தேதி அதாவது கிறிஸ்துமஸுக்கு மறுநாள் விடுமுறை என மேற்குவங்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தனியார் அலுவலகத்திற்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதேபோன்ற ஒரு அறிவிப்பு தமிழகத்திலும் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.