பிரபல நடிகை பூஜா ஹெக்டே விமானத்தில் தனது செல்போனை தவறவிட்டதாகவும், அதை தேடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை நடிகர் வருண் தவான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதோடு, அது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, அதன் பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக மாறினார். விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் மீண்டும் வந்த அவர், தற்போது விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். மேலும், சூர்யா நடிக்கும் ரெட்ரோ உட்பட சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் அவர் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் நடிகர் வருண் தவானுடன் பயணித்தபோது, பூஜா ஹெக்டே விமானத்தில் தனது செல்போனை காணாமல் விட்டுவிட்டார். அதை தேடுவதற்காக விமானத்திற்குள் பரபரப்பாக அங்கும் இங்கும் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. இதை வேடிக்கையாக வீடியோ எடுத்த வருண் தவான் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ய அதன்பின்னர் அவரே செல்போனை தேடி கண்டுபிடித்து கொடுத்தார். செல்போன் கிடைத்துவிட்டதால் உங்களை மன்னித்தேன் என்று பூஜா சொல்லும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது.