விமானம் பறப்பதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்ததால் வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்..!

Mahendran

வியாழன், 20 மார்ச் 2025 (15:50 IST)
பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் ஒரு நேர்காணலுக்கு சென்றபோது, மேலாளர் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு விமானம் பறந்து  செல்லும் சத்தம் கேட்டது. அதை ஜன்னல் வழியாக  அந்த இளைஞர், பதிலளிக்கும்போது  வேடிக்கை பார்த்தார். இதனால், அவர் மேலாளரின் கேள்விகளுக்கு பதிலளிப்பதை நிறுத்திவிட்டார். இதனை கருத்தில் கொண்டு, மேலாளர் அவரை வேலைக்கு தகுதியற்றவர் என்று அறிவித்து வெளியே அனுப்பினார்.
 
இந்த சம்பவத்தை குறித்து, அந்த இளைஞர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு பல நெட்டிசன்கள், "நேர்காணலின்போது தொழில்முறைகளை பின்பற்றுவது அவசியம். வேலைக்கு தகுதியற்றவர் என்று அறிவிக்கப்பட்டது சரியானதே" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
 
இதுபற்றி, அவரை நேர்காணல் எடுத்த மேலாளர் விளக்கமளிக்கையில், "அந்த இளைஞரின் உடல் மொழியிலும், தன்னம்பிக்கையிலும் எதிர்காலத் திட்டங்களிலும் எந்த தெளிவும் இல்லை. நான் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும்போதும், அவர் சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அதனால் தான் அவர் வேலைக்கு தேர்வு செய்யப்படவில்லை" என்று கூறியுள்ளார்.
 
இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்