இளம்பெண் பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடுமை! – நீதி கேட்டு போராட்டம்!

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (09:59 IST)
குஜராத்தில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் உள்ள சாய்ரா கிராமத்தை சேர்ந்த 19 வயது தலித் பெண் தனது சகோதரியுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணை கடத்தி கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து பெண்ணின் தந்தை போலீஸில் ஒஉகார் அளித்தும் அவர்கள் விசாரணை மேற்கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

ஜனவரி 1 அன்று காணாமல் போன அந்த பெண் யாரையோ மணம் செய்து கொண்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் ஜனவரி 5 அன்று இளம்பெண் அதே கிராமத்தில் உள்ள மரத்திற்கு இடையே தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தார். இது அந்த கிராமத்தினரு அதிர்ச்சியை அளித்தது. பெண்ணின் சகோதரி அளித்த தகவலின்பேரில் பெண்ணை கடத்தியது தர்ஷன் பர்வாத், சதீஷ் பர்வாத் மற்றும் ஜிகார் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.

இறந்த பெண்ணின் உடலை கூறாய்வு செய்ததில் அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் அந்த பெண்ணை காரில் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த கொடூர சம்பவம் குஜராத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இறந்த பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும் என குஜராத்தில் பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்