கூலி தொழிலாளி வங்கி கணக்கில் 1 கோடி

ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (13:29 IST)
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில், கூலி தொழிலாளி ஒருவர் கணக்கில் ஒரு கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக  வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில், கூலி தொழிலாளி ஒருவர் கணக்கில் ஒரு கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக  வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
அந்த நோட்டீசில், நவம்பர் 9ஆம் தேதியில் இருந்து நவம்பர் 17 ஆம் வரை உங்கள் வங்கி கணக்கில்  ரூ.1,00,10,000 டெபாசிட் ஆகியுள்ளது. பான் கார்டும் சமர்பிக்கபடவில்லை. எனவே வருமான வரித்துறையிடம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
அதிர்ச்சியடைந்த தொழிலாளி பதறிபோய் வங்கிக்கு சென்று புகார் அளிளித்துள்ளார். ஆய்வு செய்த வங்கி அதிகாரிகள், நவம்பர் மாதம் அவர் டெபாசிட் செய்த ரூ.10,000 தொகையை தவறாக  ரூ.1,00,10,000 என தவறாக பதிவிட்டுள்ளனர். இதுவே பிரச்சனைக்கு காரணமாக இருந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்