உலகின் முதல் சைவ கேஎப்சி.. அயோத்தியில் பக்தர்களுக்கு சர்ப்ரைஸ்..!

Siva

வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (17:50 IST)
உலகம் முழுவதும் கேஎஃப்சி உணவகத்திற்கு பல கிளைகள் இருக்கும் நிலையில் அனைத்து கிளைகளிலும் கேஎப்சியில் அசைவம் தான் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அசைவ உணவுக்கு இந்த உணவகம் பெயர் பெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் அயோத்தியில் சமீபத்தில் ராமர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் அயோத்தியில் இருந்து 15 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அசைவ உணவகங்கள் நடத்த தடை என்று அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்க்கட்சி தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் உத்தரப்பிரதேச அரசு இதில் இருந்து பின்வாங்காமல் உள்ளது. இந்த நிலையில் உலகிலேயே முதன் முதலாக கேஎஃப்சி தனது சைவ உணவகத்தை அயோத்தியில் திறக்க திட்டமிட்டுள்ளது.  இதனால் அயோத்தி செல்லும் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கேஎப்சியில்  இதுவரை விதவிதமான அசைவ உணவுகளை சாப்பிட மக்கள் அயோத்தியில் முதல் முதலாக சைவ உணவுகளை சாப்பிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்