நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு: மத்திய அரசு பரிசீலனை

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (07:35 IST)
நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் நிலைமை கைமீறிப் போய் உள்ளதாக தெரிகிறது அந்த மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது 

இதுகுறித்து மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும், கொரோனா பாதிப்பு குறித்து கண்டறியும் குழு ஒன்று 150 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாகவும் அந்த மாவட்டங்களில் ஊரடங்கு குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
அந்த 150 மாவட்டங்களில் சென்னை உள்பட தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களும் இருக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வருமானமின்றி வாழ்வாதாரம் இன்றி மக்கள் இருக்கும் நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் ஏழை எளிய மக்களின் நிலை பரிதாபமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்