அபிநந்தனுக்காக வரலாற்று நிகழ்வை கைவிட்ட இந்தியா - பாகிஸ்தான்

வெள்ளி, 1 மார்ச் 2019 (17:18 IST)
பாகிஸ்தான் வசம் இருந்த இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்ட நிலையில், வாகா எல்லையில் அபிநந்தனை வரவேற்க மக்கள் பலர் திறண்டுள்ளனர். 
 
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த புல்வாமாத் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் இந்தியா எல்லை தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் தாக்குதல் நடத்தியது. 
 
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானங்கள் எல்லை தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. 
இந்த தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். இதனையடுத்து நல்லெண்ண அடிப்படையிலும் விமானி அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டது. 
 
இந்நிலையில் தர்போது பாகிஸ்தானின் வாகா எல்லையை கடந்துள்ள அபிநந்தன் இன்னும் சிறிது நேரத்தில் இந்தியாவின் வாகா எல்லைக்குள் நுழைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அபிநந்தனை வரவேற்க பொதுமக்கள் எல்லை பகுதியில் குவிந்துள்ளனர். 
அபிநந்தனின் வரவு காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இன்று வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொடி இறக்கம் என்பது சூரியன் மறைவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் நிகழ்த்தப்படும். ஆனால், இன்று இந்த நிகழ்வு ரத்து செய்ப்பட்டுள்ளது. 
 
இதற்கு முன்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த தற்கொலை தாக்குதல் காரணமாகவும், 2016 ஆம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக கொடி இறக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால், முதல் முறையாக ஒரு தனிநபர் இந்திய எல்லைக்குள் வருவதற்காக கொடி இறக்கம் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் ஆகும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்