மொபைல் போன் ரேடியேஷனை குறைக்க மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட சிப் ஒன்றை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் (RKA) தலைவர் வல்லபாய் கதிரியா, கதிர்வீச்சைக் குறைக்க மொபைல் போன்களில் பயன்படுத்த மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட சிப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். கசத்வா கவாச் என இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பண்டிகை காலம் நெருங்குவதால் மாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மண் விளக்குகள், மெழுகுவர்த்திகள், விநாயகர் மற்றும் லட்சுமி சிலைகள் உள்ளிட்ட பல தயாரிப்புகளை ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.