கோவீஷீல்ட் தடுப்பூசி; வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (19:09 IST)
சில ஐரோப்பிய நாடுகள் கோவீஷீல்ட் தடுப்பூசியை அங்கீகரித்துள்ளதுடன் இது வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் என ஆய்வில் தகவல் வெளியாகிறது.
 

கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உருவான நிலையில், தற்போது குரங்கு பி வைரஸால் ஒரு மருத்துவர் உயிரிழந்துள்ளார். இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  மூன்று வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரொனா  3 வது அலை பரவும் அபாயமுள்ளதால் இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும்,  விஞ்ஞானிகளும் எச்சரித்துள்ளனர்.

கொரோனா தீவிரமாகப் பரவிய காலத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஐரோப்பியநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால், ஒரு சில நாடுகளை கோவிஷீல்டை அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் தற்போது இதை 16 ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்துள்ளன. அத்துடன் கோவீஷீல்ட் தடுப்பூசி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் என ஆய்வில் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்