பாலியல் வழக்கை அடுத்து கொலை வழக்கு – சிக்கினார் பிரபல சாமியார்...

வெள்ளி, 11 ஜனவரி 2019 (19:29 IST)
பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும் பிரபல சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும் இருந்தவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்.அதுமட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் நடித்து வெகு பிரபலமானவர். இவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை கடந்த 1999-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அது சம்மந்தமாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி என்பவர் 2002-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுக்காலம் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அப்போது பெரும் கலவரம் உண்டானது. அதையடுத்த பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது, அதில் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என அறிவித்துள்ளது. சென்ற முறைப்போல இதையடுத்து  ரஹீமின் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்க வாய்ப்புள்ளதால் பஞ்ச்குலா மட்டுமின்றி ஹரியாணாவின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தக் கொலைக்கான தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்