நித்தியானந்தாவின் சொத்து விவரங்களை சேகரிக்க நீதிமன்றம் உத்தரவு !

புதன், 4 மார்ச் 2020 (21:35 IST)
நித்தியானந்தாவின் சொத்து விபரங்களை சேகரிக்க நீதிமன்றம் உத்தரவு !

சமீபத்தில் பல்வேறு புகார்களுக்கு ஆளாகியுள்ள சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் சொத்து விவரங்களை சேகரிக்குமாறு கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்நிலையில், பெங்களூரில் உள்ள ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு, நித்யானந்தா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டுள்ள 6 பேரும் ஆஜராக வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
 
இதனைத்தொடர்ந்து, ராம் நகர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் நித்யானந்தா மற்றும் அவரது செயலர் கோபால் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் ஆஜராகவில்லை.
இதனையடுத்து, ராம் நகர் நீதிமன்றம், நித்யானந்தா மற்றும் கோபால்ரெட்டி ஆகியோரின் சொத்து பற்றிய விவரங்களை சேகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும், பிடதி ஆசிரமம் மற்றும்  நித்யானந்தாவுக்கு சொந்தமாகவுள்ள பிற ஆசிரமங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்குமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்